ஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர். எல்லாம் சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அதை பீட்டா மட்டுமா செய்கிறது?
கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே? ...
பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும் போதும் முத்தம் கொடுக்கும்போதும் பாரம்பரியம் தெரியவில்லை. கூட்டுக்குடும்பத்தை ஒழித்த போது பாரம்பரியம் தெரியவில்லை. மேல்நாட் டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக் கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.
நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு பீட்ஸா, பர்கர், கே.எஃப்.ஸி. என்று வெளி நாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்றபோது பாரம்பரியம் தெரியவில்லை. பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை உதாசீனப் படுத்தி கோக்கையும் பெப்சியையும் குடிக்கும் போது பாரம்பரியம் தெரியவில்லை...
இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து தடை வாங்கியது நம் போராளிகள்தானே.
இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் பன்முகத் தாக்குதலுக்கு உள்ளானபோது பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம்...
தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏற்கெனவே ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன...
தமிழ்நாட்டில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. ஆந்திரா, குஜராத், மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஜல்லிக்கட்டே இல்லையே? அப் போது அந்த மாநிலங்களுக்குச் சொந்தமான காளையினங்கள் அழிந்து போயிருக்க வேண் டுமே? அங்கே மட்டும் எப்படித் தழைத்திருக்கிறது?
... போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல... உச்ச நீதிமன்றம்.
...முதலில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப் புகளை ஒதுக்குங்கள். நமது பாரம்பரிய உண வான கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங் களுக்கு மாறுங்கள். இதனால் ... விவசாயிக்கு நல்ல தானிய உற்பத்தியும் வாழ்வாதாரமும் உறுதிப்படும். இதனால் பன்னாட்டு நிறுவனங் களின் கொட்டமும் அடங்கும்.
விவசாயி நல்ல நிலைமைக்குத் திரும்பினால் மாடுகளின் வாழ்வும் பெருகும். தினமும் ஒரு வேளையாவது கம்பு, கேழ்வரகு என்று பழகுங் கள். எல்லோரும் இப்படி மாறினால் யாரிடமும் தண்ணீருக்காக கையேந்த வேண்டியதில்லை.
கதராடையை உடுத்துங்கள்... கிராமத்தில் கதர் உற்பத்தி செய்யும் நெசவாளிக்கு நீங்கள் வாங்கும் கதராடையினால் ஒரு நாள் உணவு கிடைக்கிறதென்றால் அதை விட வேறென்ன வேண்டும்?
ஆனால் பன்னாட்டு நிறுவனங்களையும் பெருமுதலாளிகளையும் திட்டிக் கொண்டே இன்னொரு புறம் அவர்களிடமே போய் விழுகிறோம். பிராண்டிங்தான் மந்திரம் நமக்கு. இனியாவது நமது பாரம்பரியம் என்ன என்பதை உண்மையாக உணர்ந்து தொன்மை யான நமது பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள். சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.