Sunday, July 6, 2014

Think it...

தென் சென்னை கோட்டத்தின்  நங்கநல்லூர் அஞ்சலகத் தலைவர் தோழர். துரைசாமி அவர்களின்  மகன் கடந்த 26.06.2014 அன்று பல்லாவரத்தில் சாலை விபத்தில் படு காயம் ஏற்பட்டு உடன் அங்கிருந்தவர்களால் 108 ஆம்புலன்ஸ்  சேவையின் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்..

 அவருக்கு CGHS APPROVED இல்லாத தனியார் மருத்துவ மனையில் சேர்த்ததாக காரணம் கூறி MEDICAL ADVANCE நிறுத்தப் பட்டிருந்ததை தென் சென்னை கோட்டச் செயலர் தோழர். ராஜேந்திரன் அவர்கள்  மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். உடன் மாநிலச் செயலர் இந்தப் பிரச்சினையை சென்னை பெருநகர மண்டல PMG திரு மெர்வின்  அலெக்சாண்டர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று உதவிட வேண்டினார். 

பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட   2.00  மணி நேரத்தில் PMG  CCR அவர்கள் உடன் மேல் நடவடிக்கை எடுத்து EMAIL மூலம் உத்திரவு  அளித்து பாதிக்கப் பட்ட ஊழியருக்கு ரூ. 2,50,000/- மருத்துவ முன்பணம் வழங்கிட ஆவன செய்தார். பாதிக்கப் பட்ட ஊழியரின் இன்னல்களை உணர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த PMG  CCR திரு. மெர்வின்  அலெக்ஸாண்டர் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி. உடன் இந்த பிரச்சினையில் ஈடுபட்டு மருத்துவ முன் பணம் கிடைத்திட ஆவன செய்த DPS CCR  திரு. J .T. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும் , ASST DIRECTOR  STAFF  திரு.  பாலச்சந்தர் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். ..............
(COURTESY: aipeup3tn.blogspot.com) 
Our thoughts:
What is the need to have a CGHS approved hospital list?.
Why  employees should not be allowed to take treatment in any hospital they wish and their claim restricted to CGHS Rate?
When will we fight for this?...



No comments:

Post a Comment