Sunday, January 25, 2015

தலைவர்களின் கவனத்திற்கு .....

தலைவர்களின் கவனத்திற்கு .....

 01. ஆள் பற்றாக்குறை  களைய :

       அவுட் சோர்சிங் முறையில் அஞ்சல் எழுத்தர் பணிகளை செய்ய மாநில அளவில் டெண்டர் விட கோரிக்கை வைக்கலாமே ...

         மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்யும் தொகையில் ஆட்களை பெற டெண்டர் விடக்கோரலாமே ....

         எத்தனை அங்கிகரிக்கபட்ட காலியிடங்கள் உள்ளனவோ அத்தனை நபர்களை  அவுட் சோர்சிங் நிறுவனத்திடம் பெற்று வேலை செய்ய அனுமதி பெறலாமே ...

      கிராமிய அஞ்சல் ஊழியர்கள் முன்வராத போஸ்ட்மேன், குரூப் டி  காலிப்பணி இடங்களிலும்  இதே முறையை பின்பற்றலாமே ...
                   
       ...டெல்லியில் போஸ்ட்மேன் குரூப் டி பணிகளுக்கு  இம்முறை  உள்ளதாமே ....

     (நீங்கள் அவுட் சோர்சிங் முறையை கொள்கை அளவில் எதிர்க்கலாம் .. ஆனால் ஊழியர்கள், குறிப்பாக RURAL கோட்டங்களில்,  

குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடிக்க முடியாமலும்.... ,

தேவையான நாட்களில் விடுமுறையில் செல்ல இயலாமலும்.......,

விடுமுறை கிடைக்குமா இல்லையா என்று கடைசி நிமிடம் வரை தெரியாமலும் .... விடுமுறை கிடைத்தாலும் Relieve செய்ய ஆள் வருவாரா மாட்டாரா என்று தெரியாமலும் ....

எவனோ செய்யும் தவறுக்கு Subsidiary Offender  என்ற பெயரில் தண்டனை பெற்றுக்கொண்டும் ......

நாள்தோறும் வாடிக்கையாளரிடமும், நிர்வாகத்திடமும் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவும் ...

அட்வான்ஸ் Recruitment (அடுத்த வருட காலியிடங்களுக்கு இந்த வருடமே தேர்வு நடத்தி முடிவும் வெளியிடுவது) ..., 

போஸ்ட்மேன் , MTS  அலுவலர்களை officiating முறையில் எழுத்தராக பணிபுரிய அனுமதிப்பது...

          போன்ற யோசனைகள் நிர்வாகத்திற்கு பிடிக்காத காரணத்தால் இந்த யோசனை முன் வைக்கப்படுகிறது ...  ) 
  


02. ஸ்டேட்மென்ட்கள் (Statements) குறைக்கப்பட்டதா ....? ,


நமது பிரதமர்  அவர்கள் ,

           இந்தியாவைத்  தூய்மைப்  படுத்துங்கள் 


           காகித உபயோகத்தைக்  குறையுங்கள் 


           ஸ்டேட்மெண்ட்களைக்  குறையுங்கள்

    ...     என்றார்.

ஆனால்,  இதுவரை  எந்த      ஸ்டேட்மெண்ட்  குறைக்கபட்டுள்ளது ?.

(வேலை செய்யும் நேரத்தைவிட Statements தயாரிக்கும் நேரம் 


அதிகமாகிவிடும் போலிருக்கிறதே ...)

                           யோசியுங்கள் ......




03. குரூப் இன்சூரன்ஸ் ....


           கிராமிய அஞ்சல் ஊழியர்களின்      குரூப்  இன்சூரன்ஸ் 


தொகையைவிட ...


அஞ்சல்  எழுத்தர்களின் குரூப் இன்சூரன்ஸ் தொகை (Subscription amount & Benefit amount )

குறைவாக உள்ளதாமே ....


                       யோசியுங்கள் ......



04. Vacancy particulars with Exam notification...
    
          நேரடி தேர்வுகளுக்கு விளம்பரம் செய்யும்போதே காலியிடங்கள் 

எத்தனை என்று அறிவிக்கும் நிர்வாகம், இலாக்கா தேர்வுகளில் மட்டும் 

காலியிடங்கள் பற்றிய விபரங்களை தாமதமாக அறிவிப்பது ஏன் ...  

(உ .ம் : Postman, LGO, IP, PM grade exams)

          காலியிடங்கள் பற்றி தெரிந்தால்தானே தேர்வு எழுதுவது பற்றி 
முடிவு செய்ய முடியும் ...

                         கவனியுங்கள் ......


05.  துணை அஞ்சலகங்களில்  QUARTERS  தேவையா... (குறிப்பாக கிராம 
பகுதிகளில் )

           அலுவலகப் பாதுகாப்பிற்காக Quarters-ல் தங்கவேண்டுமெனில், 

பார்ப்பது 
 வாச்மேன் வேலைதானே ... 

           வாட்ச்மேன் வேலைக்கு சம்பளமும், தங்க இடமும் தர வேண்டியது 

நிர்வாகத்தின் பொறுப்புதானே ...

           அஞ்சல் அலுவலர்களின் HRA-ஐ பிடிப்பது எப்படி சரி ...

            பெரும்பாலான அஞ்சல் அலுவலர்கள் குழந்தைகளின் கல்வி,   

பெற்றோரின் மருத்துவ வசதி,   கணவர் / மனைவி வேலை பார்ப்பது 


போன்ற காரணங்களுக்காக  அருகில் உள்ள சிறு நகரங்களில் 


குடியிருக்க வேண்டி உள்ளது.


              துணை அஞ்சல் அதிகாரியாக அதிக பொறுப்புகளையும் Target 

டார்ச்சர்களையும் தாங்கிக்கொள்வதற்கு தண்டனையா .. (HRA Cut).

              
தீர்வு .....

அகில இந்திய அளவில் ஒரு  அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் quarters 

தேவை இல்லாத அலுவலகங்களுக்கு இன்சுர் செய்யலாமே ...
                             
                                          அல்லது 

RPLI விதிகளில், பொருட்களுக்கும்  இன்சூர் செய்யலாம்  என  மாற்றம் 

செய்து , நமக்கு நாமே இன்சூர் செய்து கொள்ளலாமே ... 

(ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ...)


             

நன்றி...    


                 

No comments:

Post a Comment