இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கினர் 35 வயதுக்குக் கீழான இளைஞர்கள். இவ்வளவு இளைஞர்கள் இருந்தாலும் இன்றைய தொழில்துறைக்குத் தேவையான திறன்படைத்த இளைஞர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
இதனால் தொழில் முனைவோரும் தொழிலாளர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலான ஒரு டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தை மத்திய அரசின் சிறு, குறு தொழில்களுக்கான அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இந்த இணைய தளத்தில் வேலை தேடுபவர் தனது படிப்பு, திறன்கள் உள்ளிட்ட தன்னைப் பற்றிய விபரங்களை அளித்துத் தன்னைப் பதிவு செய்துகொள்ளலாம். அவரது தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் அவருக்கான தனியான எண்ணும் பாஸ்போர்ட்டும் தரப்படும். அதேபோல தொழில் நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்கும் பயனர் எண்ணும், பாஸ்போர்ட்டும் தரப்படும். தங்களுக்குத் தேவையானவர்களைத் தொடர்புகொண்டு அவர்களை நேர்காணலுக்கு அழைக்கலாம். அதில் தேர்வு பெற்றால் அவருக்கு வேலையளிக்கலாம்.
எத்தனையோ தனியார் வேலைவாய்ப்பகங்கள் இணையத்தில் இருந்தாலும் தொழில்நிறுவனங்களுக்கும் வேலைதேடுவோருக்குமான இணைப்பகமாக மத்திய அரசு இந்த டிஜிட்டல் வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கியுள்ளது. நீங்களும் பதிவு செய்ய www.eex.dcmsme.gov.inஎன்ற முகவரிக்குச் செல்லலாம்.
(courtesy: www.dinamani.com)
(courtesy: www.dinamani.com)
No comments:
Post a Comment