Thursday, April 24, 2014

திருக்குறள்...சில தகவல்கள்...

திருக்குறளைப்பற்றி சில  தகவல்களை பார்ப்போம்.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"

மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.


திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறிஸ்து ஆண்டு (கிபி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எ.கா: 2014 +31 = 2045 (கி.பி.2014-ஐ திருவள்ளுவர் ஆண்டு 2045 என்று கூறுவோம்)

* திரு+குறள்= திருக்குறள்


* திருக்குறள் இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.

* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

* திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

* திருக்குறளில் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்களாக 133 அதிகாரங்களையும், 1330 குறள்களையும் கொண்டது.

* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

* திருக்குறள் தமிழ்ச் செய்யுள்களில் முதல் பாவாகிய வெண்பாவில் முதல் வகையாகிய குறட்பாக்களால் ஆனது.

* திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்: குறிப்பறிதல் - (பொருட்பால் - அதிகாரம் 71) குறிப்பறிதல் - (காமத்துப்பால் - அதிகாரம் 110)

* திருக்குறளில் முப்பால்களிலும் 120-க்கும் மேற்பட்ட உவமைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. திருக்குறளில் அனிச்ச மலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் சுட்டப்பட்டுள்ளன.

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள


* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்

* திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

* திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல்.

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்


* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்

* திருக்குறள் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.


* திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் - வீரமாமுனிவர்.

* அன்புடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை, பண்புடைமை, நாணுடைமை என வள்ளுவர் கூறிய உடைமைகள் 10.



(ந ன் றி : தி ன ம ணி )

No comments:

Post a Comment