By ஜெயபாஸ்கரன் First Published : 18 April
2014 01:50 AM IST
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக
அளவில் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகளைப் பற்றி நமது சமூகம்
எந்த அளவுக்குக் கவலைப்படாமல் இருக்கிறது என்பதற்கான அவமானகரமான சான்றாகவே இத்தகைய ஆழ்துளைக் கிணறுகள்
ஆங்காங்கே வாய்திறந்து கிடக்கின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரவலாக
நடந்து கொண்டிருக்கின்றன.
செவ்வாய்க் கிரகத்தை நோக்கி "மங்கள்யான்' வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் அளவுக்கு
வானவியல் விஞ்ஞானத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கும் நமக்கு, ஆழ்துளைக் கிணறுகளில்
உயிர்விட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் காப்பாற்றும் பூமியியல் விஞ்ஞானம் சாத்தியப்படாமல் இருக்கிறது.
ஆழ்துளைக் கிணற்றில் ஒரு குழந்தை விழுந்தவுடன்
சக்தி வாய்ந்த எந்திரங்களைக் களத்தில்
இறக்கி முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் பல்வேறு அரசுத்துறைகளைச் சார்ந்த
நுற்றுக்கணக்கானவர்கள் துடிதுடிப்போடு செயல்பட்டு ஒவ்வொரு முறையும் தோற்றுத்
திரும்புகிறார்கள். அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் அது
போன்ற கிணறுகளை மூடித் தொலைப்போமே என்று
ஒருவருக்கும் ஏனோ தோன்றாமல் போய்விடுகிறது.
ஆழ்துளைக் குழாய் கிணறு ஒன்றில்
ஒரு குழந்தை விழுந்து இறக்கும்
செய்தி ஊடகங்களின் வாயிலாக நாட்டின் மூலை
முடுக்குகளில் எல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டாலும்
கூட அந்தச் செய்திகளில் இருந்து
யார் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்? அப்படியிருந்தால் அடுத்த
ஆழ்துளைக் கிணறு இன்னொரு குழந்தையை
விழுங்க வாய்ப்பில்லையே! ...............
.
............இதுவரை ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை உயிருடன்
மீட்பதில் நாம் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கிறோம்
என்பதே கசப்பான உண்மை. ஆழ்துளைக்
கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பது என்பது தொடர
ஆரம்பித்த உடனேயே அதிகாரிகள் விழித்துக்கொண்டு
அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்து ஒரு தனியான
மீட்புக் குழுவை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
.......................வெகு
எளிதாக மூடிவைக்க முடிந்த ஒரு ஆழ்துளைக்
கிணற்றை திறந்து போட்டு வைக்கிறோமே
என்கிற அறிவு ஆழ்துளைக் கிணற்று
உரிமையாளர்களிடம் இல்லை. அவர்களின் அறிவின்மையால்
கிணற்றில் விழுந்துவிட்ட குழந்தைகளை உயிருடன் மீட்கிற அறிவியலும் நமது
நிர்வாக அமைப்புகளிடம் இல்லை. அறிவின்மையும் அறிவியலின்மையும்
கைகோத்துக் கொண்டு நமது குழந்தைகளை
காவுகொடுத்துக் கொண்டிருக்கின்றன.
(Courtesy: Dinamani)
No comments:
Post a Comment