Friday, April 18, 2014

Why not ....

...  திறந்த வெளிக் கழிப்பிடங்களை உபயோகிப்பவர்கள் அதை விரும்பி அசுத்தம் செய்வதில்லை. வேறெந்த ஏற்பாடுகளும் இல்லாத நிலையில் அவர்களுக்குக் கண்முன்னே தெரிவது நடைபாதைகளும், ரயில் தண்டவாளங்களும், ஊருக்கு ஒதுக்குப் புறமான திறந்த வெளிகளும்தான்.
இவர்களின் நிலையை மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம். அதுவும் சில நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அசெüகர்யங்கள் பற்றிப் புரிந்துகொள்ளவும், திட்டமிடவும் ஆட்சியாளர்கள் பெண்ணாய் இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.....  


.......பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்காதீர் என்று விளம்பரங்கள் சொல்லுகின்றன. ஆனால் மிக அவசரமாக தனது உபாதையைத் தீர்க்க விரும்புபவருக்கு அரசு என்ன வசதி செய்திருக்கிறது?

நாட்டின் ஒரு கோடியில் குறைந்தது பத்து லட்சம் பேர் பயணிக்கும் புறநகர் ரயில் நிர்வாகமாகட்டும் அல்லது பெரிய அளவில் மக்கள் புழங்கும் மாநகரப் பேருந்து நிலையங்களாகட்டும் அல்லது மறு கோடியில் இருக்கும் கன்யாகுமரியின் கடற்கரை ஓரமாகட்டும் எங்கும் தேவைக்கேற்ப கழிப்பறைகள் கிடையாது.


மாநகரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் ஒரு வணிக நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையில் பதிநான்காவது மாடியில் அமைந்திருக்கும் கழிப்பறையை உங்கள் ஆடைகளை நனைத்தபடியே சென்று அடையும்போது கழிப்பிடத்தில் கழிப்பதற்கு ஒரு சொட்டுக் கூட மிச்சமிருக்காது என்பதே நிதர்சனம்.

எத்தனை எத்தனை புதிய வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிகின்றன?   உள்ளூரிலேயே எத்தனை எத்தனை புதிய பெரும் வணிக நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன? ஒவ்வொரு ஆண்டும் அந்நிறுவனங்களுக்கு முதலில் கண்ணில் படுவது பூங்காக்களை நிர்மாணித்து அவற்றைப் பராமரிப்பதும் சாலைகளில் தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட தடுப்பான்களை வழங்குவதும் மட்டும்தான் பிரதானமாயிருக்கிறது.

புதிதாய் பல்லாயிரம் கோடிகளில் துவங்கும் அந்நிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் படும்போதே ஒவ்வொரு நகரத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நவீன கழிப்பறைகளை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களுக்கு ஒரு நிபந்தனையாக்கி நகரத்தையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஏன் தூய்மையாக்க முடியாது?....
  
.......நிச்சயமாக ஒவ்வொரு தெருவிலும் அந்தத் தெருவின் புழக்கத்துக்கு ஏற்ப கழிப்பறைகள் நிறுவப்படவேண்டும். வயோதிகர்களுக்கும், குறிப்பாய் நீரிழிவு நோயாளிகளுக்கும், பெண்களுக்கும் இது ஒரு பெரிய விடுதலையாய் இருக்கும். கழிப்பறையின்மை குறித்த கவலையால் பெண்கள் போதிய அளவு நீர் பருகுவதுகூட இல்லை. நீண்ட நேரத்துக்கு உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளாமல் இயங்குவதால் மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கும் அழுத்தங்களுக்கும் பெண்கள் ஆளாகின்றனர்.....


(Courtesy:  Dinamani)

No comments:

Post a Comment